முன்னோக்கு

எலோன் மஸ்க் பெற்ற 1 டிரில்லியன் டாலர் ஊதியக் கொடுப்பனவும், அதனை பறிமுதல் செய்ய வேண்டிய அவசியமும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

பட்லர் பண்ணை கண்காட்சி பிரச்சார நிகழ்வில் பேசிய பிறகு, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் புறப்படத் தயாராகும் போது, ​​இடதுபுறத்தில் உள்ள குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைதட்டுகிறார். அக்டோபர் 5, 2024 [AP Photo/Alex Brandon]

461 பில்லியன் டாலர் நிகர மதிப்பைக் கொண்ட உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்கிற்கு, 10 ஆண்டுகளில் 1 டிரில்லியன் டாலர் ஊதியத் தொகை டெஸ்லா நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகின் முதல் டிரில்லியனராக மாறுவதற்கான பாதையில் தலைமை நிர்வாக அதிகாரி மஸ்க் நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தம், மஸ்க்கின் ஆண்டு ஊதியத்தை ஒரு மணி நேரத்திற்கு சுமார் 50 மில்லியன் டாலர்களாக, அல்லது டெஸ்லா தொழிற்சாலையின் ஒரு மணி நேர ஆரம்ப ஊதியமான 18 டாலரை விட 3 மில்லியன் மடங்கு அதிகமாக நிர்ணயிக்கும்.

1987 ஆம் ஆண்டில், பத்திர மோசடி குற்றவாளியாகப் பின்னர் தண்டனை பெற்ற “உயர் ஆபத்து பத்திரங்களின் மன்னர்” என்ற நிதியாளர் மைக்கேல் ஆர். மில்கன் ஒரே ஆண்டில் 500 மில்லியன் டாலர்களைப் பெற்றது ஒரு பரவலான ஊழலாகக் கருதப்பட்டது. மஸ்க்கின் ஊதிய ஒப்பந்தத்தின் கீழ்ர டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி அந்தத் தொகைக்கு நிகராக ஒவ்வொரு நாளும் சம்பாதிக்க உள்ளார்.

ட்ரம்ப் நிர்வாகம் பத்து மில்லியன் கணக்கான மக்களுக்கான உணவு முத்திரை செலவினங்களை வெட்டிய அதே வாரத்தில், மற்றும் ஒரு அரசாங்க பணி முடக்கத்துக்கு மத்தியில் மில்லியன் கணக்கான மத்திய கூட்டாட்சி தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் இருந்த அதே வாரத்தில், டெஸ்லாவின் பங்குதாரர்கள் மஸ்க்கின் முன்னெப்போதும் இல்லாத ஊதியப் பொதியை அங்கீகரித்தனர் என்ற உண்மை, மஸ்க் மற்றும் அவரது சக தன்னலக்குழுக்களின் செல்வச் செழிப்பானது, தொழிலாள வர்க்கத்தின் வறுமை மற்றும் துன்பத்தின் மூலமாக ஏற்படுகிறது என்ற உண்மையை தெளிவாக வெளிப்படுத்துகிறது.

உலக வரலாற்றில் எந்தவொரு தலைமை நிர்வாக அதிகாரியின் ஊதியத்தையும் விட, மிகப் பெரியளவில் இருக்கும் மஸ்க்கின் ஊதியப் பொதி, சார்லஸ் ஷ்வாப் கார்ப்பரேஷன் மற்றும் மோர்கன் ஸ்டான்லி உள்ளிட்ட முக்கிய அமெரிக்க நிதி நிறுவனங்களின் பொது ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. 75 சதவிகித “ஆம்” என்ற ஒப்புதல் வாக்குகள், திரைக்குப் பின்னால், வான்கார்ட் குழுமம், பிளாக் ரொக் மற்றும் கோல்ட்மேன் சாக்ஸ் உள்ளிட்ட டெஸ்லாவின் பெரும்பாலான முக்கிய பங்குதாரர்களும் இந்த ஒப்பந்தத்தை ஆதரித்திருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.

அவர்களின் நோக்கம் தெளிவாகிறது: பெருநிறுவன நிர்வாகிகள் மற்றும் பரந்த அளவில், நிதியியல் தன்னலக்குழுவின் ஊதியத்திற்கு ஒரு புதிய அடித்தளம் நிர்ணயிக்கப்படும். ஒரு காலத்தில் முதல் டிரில்லியனராக முடிசூட்டப்பட்ட மஸ்க், பல டிரில்லியனர்களில் முதலாவதாக இருப்பார், அவரைப் பின்தொடர்ந்து பல டிரில்லியனர்கள் வருவார்கள்.

மஸ்க் இந்த ஊதியத்தைப் பெற, டெஸ்லா 20 மில்லியன் வாகனங்களை வழங்க வேண்டும், 1 மில்லியன் ஓட்டுநர் இல்லாத ரோபோ டாக்ஸிகளை சேவையில் வைக்க வேண்டும், 1 மில்லியன் மனிதனைப் போன்ற ரோபோக்களை விற்க வேண்டும், மற்றும் டெஸ்லா மதிப்பீட்டை 1.5 டிரில்லியன் டாலரிலிருந்து 8.5 டிரில்லியன் டாலராக உயர்த்த வேண்டும். இந்த மைல் கற்களை அடைவதற்கான ஒரே வழி, தொழிலாள வர்க்கத்தின் மீதான சுரண்டலை பெருமளவில் தீவிரப்படுத்துவதாகும்: அதாவது, டெஸ்லா தொழிற்சாலைகளில் நேரடியாகவும், சமூக செலவினங்களில் கடுமையான வெட்டுக்கள் மூலமாகவும் கிடைக்கும் சேமிப்புகளை நிதிச் சந்தைகளில் செலுத்துவதன் மூலமாக இது நடைபெறும்.

இவ்வாறாக, மஸ்க்கிற்கு ஊதியப் பொதியை வழங்குவது என்பது, பணிநீக்கங்கள், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சமூக வேலைத் திட்டங்களை அழிப்பதன் அழித்தல் ஆகியவற்றின் மூலமாக, தொழிலாள வர்க்கத்தை பாரியளவில் வறுமையில் ஆழ்த்துவதற்கான ஆளும் வர்க்கத்தின் நோக்கத்தின் அறிவிப்பாகும்.

மஸ்க்கின் செல்வ வளத்தின் உயர்வு, அமெரிக்காவின் நிதி உயரடுக்கின் பிரமாண்டமான செல்வச் செறிவூட்டலைக் குறிக்கிறது. மார்ச் 2020 இல், 33 பில்லியன் டாலராக இருந்த அவரது சொத்து நிகர மதிப்பு, பின்னர் 469 பில்லியன் டாலராக உயர்ந்து 14 மடங்குகள் அதிகரித்தது. இதே காலகட்டத்தில், அமெரிக்காவின் பத்து பணக்காரர்களின் செல்வம் ஆறு மடங்காக அதிகரித்தது.

மஸ்கின் செல்வம், ஒவ்வொன்றும் முந்தையதை விடப் பெரியதாக இருக்கும் தொடர் நிதி குமிழ்களை அடிப்படையாகக் கொண்டது, மேலும் அவை அரசாங்க நிதி உதவி மற்றும் மானியங்களால் தாங்கப்படுகிறது. மஸ்கின் பெரும்பாலான செல்வத்தின் ஆதாரமான டெஸ்லா, இந்த ஊக வணிக வெறியை உள்ளடக்கியுள்ளது. கடந்த ஆண்டு, டெஸ்லா வெறும் 5 பில்லியன் டாலர் இலாபங்களை மட்டுமே ஈட்டியது, மேலும் அதன் உலகளாவிய விற்பனை, வருவாய் மற்றும் இலாபங்கள் தேக்கமடைந்து வருகின்றன அல்லது குறைந்து வருகின்றன. இப்படி இருந்தபோதிலும், ஏப்ரல் மாதத்திலிருந்து அதன் பங்கு விலை இருமடங்காகியுள்ளது.

சந்தை மூலதனத்தின் அடிப்படையில் அமெரிக்க வாகனத் தொழில்துறை

கிட்டத்தட்ட 12 சதவீதமான வாகனங்களை மட்டுமே விற்கின்ற போதிலும், அமெரிக்க வாகனத் தொழிற் துறையின் சந்தை மதிப்பில் 90 சதவீதத்தையே டெஸ்லா கொண்டுள்ளது. இது ஜெனரல் மோட்டார்ஸை விட 20 மடங்கு அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டிருந்தாலும், இது உலகளவில் கால் பங்கு வாகனங்களை மட்டுமே விற்கிறது.

ஏறக்குறைய $1.4 டிரில்லியன் சந்தை மதிப்புடன், டெஸ்லா அமெரிக்க வாகன சந்தையின் மதிப்பில் 90 சதவீதத்தைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்களில் 12 சதவீதத்தை மட்டுமே விற்கிறது. ஜெனரல் மோட்டார்ஸை விட டெஸ்லாவின் சந்தை மதிப்பு 20 மடங்கு அதிகமாக இருந்தாலும், உலகளவில் அது விற்கும் வாகனங்கள் ஜெனரல் மோட்டார்ஸின் நான்கில் ஒரு பங்காக மட்டுமே உள்ளன.

முக்கிய அமெரிக்க வாகன உற்பத்தியாளர்களின் பங்கு விலை-வருமான விகிதம்

முதலீட்டாளர்கள் டெஸ்லாவின் பங்குகளை வாங்கி வைத்திருக்கும் வரையில், அது ஒரு ஊக வணிகக் கருவியாகவே உள்ளது: எதிர்காலத்தில் அது யதார்த்தமாக அதிக கார்களை விற்கும் என்று அவர்கள் நம்புவதால் அல்ல, மாறாக அதன் பங்கு மதிப்பு அதிகரிக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

ஆனால், தொழில்நுட்பத்துறை பங்குகளில் ஒரு பாரிய குமிழிக்கு மத்தியில் இருக்கும் முழு அமெரிக்கப் பங்குச் சந்தைக்கும் பொருந்தும். அதன் மதிப்பீடுகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோ இயந்திரங்களின் சமூக தாக்கத்துடன் —அவை முக்கியமானவை என்றாலும்—எந்த தொடர்பும் இல்லை.

டெஸ்லா நிறுவனம், மஸ்க்கின் செல்வத்தின் ஒரு பகுதியாகும். மஸ்க், தனியார் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தில் கணிசமான பங்குகளை வைத்திருக்கிறார். அதன் வருவாயில் பெரும்பகுதி நேரடியாகப் பாதுகாப்புத் துறையிலிருந்து வருகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர்களில் முதன்மையான பயனாளிகளில் ஒருவராக மாஸ்க் இருந்து வருகிறார்.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், உலகின் மிகப்பெரிய பாதுகாப்பு ஒப்பந்தக்காரராக பரவலாக கருதப்படுகிறது. இது ஸ்டார்ஷீல்ட் (Starshield) எனப்படும், அமெரிக்க இராணுவம் மற்றும் அதன் கூட்டாளிகள் பயன்படுத்தும் சுமார் 200 செயற்கைக்கோள்களின் வலையமைப்பை இயக்குகிறது. ட்ரம்ப் நிர்வாகம், இதை ஏவுகணைகள் மற்றும் வழிநடத்தப்பட்ட ஆற்றல் ஆயுதங்கள் மூலம் ஆயுதமாக்க முயன்று வருகிறது.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், இதேபோல் உலகின் மிகப்பெரிய செயற்கைக்கோள் இணைய வலையமைப்பான ஸ்டார்லிங்கையும் (Starlink) இயக்குகிறது. இது உக்ரேனில் அமெரிக்க / நேட்டோ பினாமி துருப்புகளுக்கு தகவல் இணைப்புகளை வழங்குவது உட்பட பென்டகனில் மில்லியன் கணக்கான டாலர் ஒப்பந்தங்களையும் பெற்றுள்ளது.

உலகின் மிகப்பெரிய செயற்கைக்கோள் இணைய வலையமைப்பான “ஸ்டார்லிங்கை” ஸ்பேஸ்எக்ஸ் இயக்குகிறது. இது அமெரிக்க பாதுகாப்புத் துறையிலிருந்து (பெண்டகன்) மில்லியன் கணக்கான டாலர் ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தங்களில், அமெரிக்கா/நேட்டோவின் உக்ரேனில் உள்ள பினாமி துருப்புகளுக்கு தகவல் இணைப்பு வசதிகளை வழங்குவதும் அடங்கும்.

கடந்த வாரம், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், ட்ரம்ப் நிர்வாகத்தின் “கோல்டன் டோம்” (Golden Dome) ஏவுகணை இடைமறிப்பு பாதுகாப்பு கட்டமைப்பு திட்டத்தின் கீழ், ஏவுகணை கண்காணிப்பு செயற்கைக் கோள்களை உருவாக்க ஸ்பேஸ்எக்ஸ் 2 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தைப் பெற உள்ளது என்று செய்தி வெளியிட்டுள்ளது.

இறுதி ஆய்வில், மஸ்க் ஒரு காகிதச் செல்வத்தின் மேல் அமர்ந்திருக்கிறார். அது அடிப்படை பொருளாதார செயல்பாடுகளுடன் கொண்டுள்ள தொடர்பு பெரும்பாலும் ஒரு மேலோட்டமான திரை மட்டுமே. பாரம்பரிய “போன்ஸி திட்டத்தின்” வரையறையின்படி, உள்ளே வரும் பணத்தை விட வெளியே செல்லும் பணம் குறைவாக இருக்கும் வரை, இது ஒரு சாதாரண வணிகத்திலிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியாதது.

இந்த சமூக யதார்த்தம்தான் மஸ்க்கின் பாசிச அரசியலை விளக்குகிறது. டொனால்ட் ட்ரம்ப்பின் பதவியேற்பு விழாவின்போது, மஸ்க்கின் நாஜி வணக்கத்தில் பொதிந்துள்ள யூத-விரோத கூச்சல்களை அவர் தொடர்ந்து ஊக்குவித்து வருவது, ஒட்டுமொத்த முதலாளித்துவ தன்னலக்குழுவின் குணாம்சத்தை வெளிப்படுத்துகிறது.

ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிகரித்து வரும் சதித்திட்டம், தொழிலாள வர்க்கத்தின் மீது போரை நடத்தி, சமூக செலவினங்களை வெட்டிக் குறைத்து வரும் தன்னலக்குழுவின் நலன்களை பிரதிபலிக்கிறது. இது, ட்ரம்பின் அரசாங்க செயல்திறன் துறையின் (DOGE) தலைவராக மஸ்க் பதவி வகித்த காலத்திலிருந்து அவர்களால் பின்பற்றப்படுகிறது. இதன் முதன்மை இலக்குகளாக, மருத்துவ காப்பீடு, மருத்துவ உதவி மற்றும் சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து அடிப்படை சமூகத் திட்டங்களும் அடங்குகின்றன.

தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகள் மீதான இந்த நேரடித் தாக்குதல் முன்னரைவிட, அரசு, தன்னலக்குழு மற்றும் இராணுவத்தின் நெருக்கமான இணைப்போடு சேர்ந்து இடம்பெறுகிறது. ஒரு பில்லியனரான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது பதவியேற்பு விழாவில் அமெரிக்க நிதிய தன்னலக்குழுவின் முன்னணி நபர்களை ஒன்று திரட்டினார். கடந்த செப்டம்பரில் வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு கூட்டத்தில், ட்ரம்பும் தன்னலக்குழுக்களும் பரஸ்பர விசுவாசத்துக்கு உறுதியளித்தனர். தொழில்நுட்பத்துறை குமிழியை விரிவுபடுத்துவதற்கான தனது ஆதரவை ட்ரம்ப் அறிவித்தபோது, தொழில்நுட்பத்துறையின் தன்னலக்குழுக்கள் —பில் கேட்ஸ் (மைக்ரோ சொப்ட்), டிம் குக் (ஆப்பிள்), சுந்தர் பிச்சை (கூகிள்) மற்றும் பலர்— அவரது நிர்வாகத்தை பாராட்டினர்.

வெள்ளை மாளிகையில் நடந்த காட்சி, சில வாரங்களுக்குப் பின்னர் வின்ட்சர் கோட்டையில் ட்ரம்ப் மற்றும் பிரிட்டிஷ் முடியாட்சியுடன் அதே தன்னலக்குழுக்களின் கூட்டம், 1916 ஆம் ஆண்டு விளாடிமிர் லெனின் எழுதிய ஏகாதிபத்தியம் என்ற படைப்பில் கூறியதை அடிக்கோடிட்டுக் காட்டியது: “ஜனநாயக-குடியரசுக் கட்சியினருக்கும், பிற்போக்குத்தனமான- முடியாட்சிவாத ஏகாதிபத்திய முதலாளித்துவத்திற்கும் இடையிலான வேறுபாடு துல்லியமாக அழிந்துபோகிறது. ஏனென்றால், அவை இரண்டும் உயிருடன் அழுகிக் கொண்டிருக்கின்றன.”

தொழிலாள வர்க்கத்தை வறிய நிலைக்குத் தள்ளுவதன் மூலமும், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலின் மூலமும், தனது செல்வம், சலுகைகள் மற்றும் அதிகாரத்தை பாதுகாப்பதற்கான நிதிய தன்னலக் குழுவின் தீர்மானம் தவிர்க்க முடியாமல் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பின் வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும்.

ஆனால் இந்த எதிர்ப்பு, அதன் பணிகளைப் பற்றிய தெளிவான புரிதலுடன் ஆயுதபாணியாக்கப்பட வேண்டும். ஒரு “சாதாரண” முதலாளித்துவத்திற்கு திரும்புவது சாத்தியமில்லை. தொழிலாள வர்க்கத்தின் மீதான சுரண்டல் விகிதத்தில் ஏற்படும் எந்தவொரு குறைப்பும், நிதியக் குமிழியின் ஒட்டுமொத்த வீழ்ச்சிக்கும் வழிவகுக்கும். எனவே, முதலாளித்துவ வர்க்கத்தால் இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. நிதிய உயரடுக்கும், அதன் பரந்த அடக்குமுறை மற்றும் நாசவேலை எந்திரமும், அதன் செல்வத்தையும் சமூக சலுகைகளையும் பாதுகாக்க பற்கள் மற்றும் நகங்களுடன் போராடும்.

1850களின் பிற்பகுதியில், வில்லியம் ஹென்றி சீவர்ட் அழைத்ததுபோல, அமெரிக்க சமூகமானது, “எதிர்க்கும் மற்றும் நீடித்த சக்திகளுக்கு இடையே ஒரு தவிர்க்க முடியாத மோதலை” எதிர்கொண்டது. இதன் பொருள், “அமெரிக்கா முற்றிலும் அடிமைகளை வைத்திருக்கும் தேசமாகவோ அல்லது முற்றிலும் சுதந்திரமான உழைப்பாளி நாடாகவோ” மாற வேண்டியிருந்தது.

இன்று, அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் ஜனநாயக ஆட்சி வடிவங்களை அழிக்கத் தீர்மானித்த மூலதனத்திற்கும், சமூகத்தின் பெரும்பான்மையாக இருக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே இதேபோன்ற “தவிர்க்க முடியாத மோதல்” உருவாகியுள்ளது.

இந்த மோதல் தன்னலக்குழுவின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதன் மூலமாக மட்டுமே தீர்க்கப்பட முடியும். பில்லியனர்களால் குவித்து வைக்கப்பட்டுள்ள செல்வவளம் கைப்பற்றப்பட்டு, சமூக வாழ்க்கையின் நிலைமைகளை தீர்மானிக்கும் பெரும் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் தொழில்துறைகள் பொது உடைமை மற்றும் தொழிலாளர்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். இந்த வழியில் மட்டும்தான் நவீன சமூகத்தின் அளப்பரிய உற்பத்தித் திறன்களை முதலாளித்துவ வர்க்கத்தின் ஒட்டுண்ணித்தனமான பிடியிலிருந்து விடுவித்து, வறுமை, சமத்துவமின்மை மற்றும் போரை ஒழித்துக்கட்ட பயன்படுத்த முடியும்.

அத்தகைய மாற்றம், செல்வந்தர்களின் ஒழுக்கநெறிக்கு முறையிடுவதன் மூலமோ அல்லது முதலாளித்துவ சமூகத்திற்குள் ஓரளவு சரிசெய்தல் மூலமாகவோ ஏற்படப் போவதில்லை. இதற்கு, ஒவ்வொரு தொழிற்துறையிலும், நகரத்திலும், நாட்டிலும் தொழிலாளர்களின் ஒரு பாரிய, சுயாதீனமான இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு, தொழிலாள வர்க்கத்தின் நனவான, ஒழுங்கமைக்கப்பட்ட தலையீடு அவசியமாகும். தொழிலாள வர்க்கம் அதன் கூட்டு சக்தியை சர்வதேச அளவில் அணிதிரட்ட வேண்டும்.

சமத்துவமின்மை, சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டம், இன்றியமையாதபடி, சோசலிசத்திற்கான ஒரு போராட்டமாகும். அதாவது, தனியார் இலாபத்திற்காக அல்லாமல் மனித தேவையின் அடிப்படையில் பொருளாதார வாழ்வை மறுஒழுங்கு செய்வதாகும்.

Loading